மனிதனின் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது



இன்று மாறிய வாழ்க்கை முறை அனைத்துமே உடல் நலத்தில் கடுமையான பாதிப்பை உண்டாக்கிவிட்டது.



தூக்கமின்மையை இயல்பாக போக்க தேவையான எளிய குறிப்புகள் பார்க்கலாம்.



குறைந்தது பாதி அளவு செரிமானம் ஆனபிறகு தூங்க சென்றால் தூக்கமும் வரும். செரிமானப்பிரச்சனைகளும் வராது.



உற்சாக பானங்கள் தூக்கத்தை கலைக்க செய்பவை, அதற்கு மாற்றாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.



அறைக்குள் காற்றோட்டம் இருக்க வேண்டும். அறை அதிக புழுக்கமாகவும், அதிக குளிராகவும் இருக்க வேண்டாம்.



தலையணை தலைக்கும் கழுத்து தோள்பட்டைக்கும் சரியாக பொருந்த வேண்டும்.



படுக்கையறை நறுமணமாக இருக்க வேண்டும். இது மனதில் இருக்கும் அழுத்தத்தை குறைத்து மனதை அமைதிப்படுத்தும்



படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே டிவி, செல்ஃபோன் பார்ப்பதை முடித்துவிடுங்கள்.



தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்க செல்வதன் மூலம் அடுத்த நாள் காலை விழிப்பும் சரியான நேரமாக இருக்கும்.