உங்களுடைய Wifi-யை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி தெரியுமா?



உங்களுடைய Wifi சரியாக configuration செய்யப்படவில்லை என்றால் அதை எளிதாக ஹேக்கர்கள் ஹேக் செய்ய முடியும்.



முதல் முறையாக Wifi-யை வாங்கிய பிறகு அதில் இருக்கும் அட்மின் பெயர் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்ற வேண்டும்.



ஏனென்றால் ஏற்கெனவே இருக்கும் பாஸ்வேர்டு எளிதாக ஹேக்கர்களால் கணிக்கும் வகையில் இருக்கும்.



Wifi யில் இருக்கும் நெட்வோர்க் பெயரிலும் மாற்றம் செய்ய வேண்டும்.



அதாவது உங்களுடைய Wifiயில் உள்ள SSID பெயரை மாற்ற வேண்டும்.



Wifi-யில் உள்ள Remote Access-ஐ Disable செய்து வைத்திருக்க வேண்டும்.



ஏனென்றால், Remote Access மூலம் ஹார்டுவேர் சாதனங்கள் Router உடன் connect செய்ய முடியும்.



உங்களுடைய Wifi-யை பயன்படுத்தவில்லை என்றால் ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும்.



உங்களுடைய Wifi ஆஃப் செய்து இருந்தால் இணையதளத்துடன் இருக்காது. அப்போது ஹேக்கர்கள் அட்டாக் செய்வது கடினம்.