வெயிலுக்கு இதமான இளநீர் பாயாசம் எப்படி தயார் செய்வது என பார்க்கலாம்



இளநீர் பாயாசம் செய்ய அதிக நேரம் நமக்கு தேவைப்படாது



தேவையான பொருட்கள் : பால் (2 கப்), சர்க்கரை (3 டீஸ்பூன்), தேங்காய் (2), தேங்காய் துருவல் (2 கப்)
இளநீர் (1/4 கப்), ஏலக்காய் (4), நெய் (1 டிஸ்பூன்), முந்திரி


ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின் அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.



ஒரு தேங்காயில் சிறிதளவு இளநீர் ஊற்றி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். மற்றொரு தேங்காயை பொடியாக நறுக்கவும்.



அடுத்ததாக 2 கப் தேங்காய் துருவலோடு ஏலக்காய் சேர்த்து அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்



தொடர்ந்து நெய்யில் முந்திரி பருப்புகளை போட்டு வறுத்துக் கொள்ளவும்



கடைசியாக ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த தேங்காய், பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய்,
பால், தேங்காய் பால் முந்திரி பருப்பு சேர்த்து கலக்கவும்


அவ்வளவு தான் இளநீர் பாயாசம் ரெடி..!



இளநீர் பாயாசத்தை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் கூட சாப்பிடலாம்