ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது



48 லீக் ஆட்டங்களை கொண்ட இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது



அதில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்ற போட்டியில் நிகழ்ந்த சாதனையை பார்ப்போம்



நேற்று நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின



டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது



49. 2 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 388 ரன்களை குவித்தது



389 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தான் ஆஸ்திரேலிய அணியிடம் ஆட்டத்தை விட்டுக்கொடுத்தது



இதில் ரச்சின் ரவீந்திரா 89 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரி, 5 சிக்ஸ்ர்கள் என மொத்தம் 116 ரன்களை குவித்தார்



முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 388 ரன்களும், அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 383 ரன்களும் எடுக்க மொத்தம் 771 ரன்கள் எடுத்தன



48 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட அதிக ரன்களாக இது பார்க்கப்படுகிறது