வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும்



உதாரணமாக முழு தானிய பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றை கூறலாம்



மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்



இந்த உணவு பொருட்கள் எல்லாம் ஒன்று சேர, உடல்நலனுக்கு இது நல்லது என்கிறார், விக்டோரியா டெய்லர்



விக்டோரியா டெய்லர் பிரிட்டன் இதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகர் ஆவார்



மெடிட்டரேனியன் டயட் உணவுமுறைபடி உணவு உட்கொள்வதன் மூலம் பல நன்மைகள் உள்ளன



இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன



இந்த உணவுமுறையை பின்பற்றினால், நீண்ட ஆயுளுடன், உடல் எடை கூடாமல் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



நல்ல உடற்பயிற்சி செய்வது அவசியம்