மக்களே...இந்த பழங்களோடு பால் சேர்த்து குடிக்கவே கூடாது!
Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels
கோடை காலத்தில் பலர் பழச்சாறுகள் மற்றும் மில்க் ஷேக்குகளை குடிக்கிறார்கள், இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கருதப்படுகிறது.
Image Source: pexels
ஆனால் உங்களுக்குத் தெரியுமா, சில பழங்களை பாலுடன் சேர்த்து குடிப்பது தீங்கு விளைவிக்கும்?
Image Source: pexels
மேலும் தவறான சேர்க்கையால் செரிமானம் பாதிக்கப்படலாம், எந்த பழத்தின் மில்க் ஷேக் குடிக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
Image Source: pexels
புளிப்பு சுவை கொண்ட பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை பால் உடன் சேர்த்து அருந்தக் கூடாது. அவ்வாறு அருந்தினால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படலாம்.
Image Source: pexels
அத்துடன், அன்னாசிப் பழத்தில் உள்ள நொதிகள், பாலுடன் வினைபுரிந்து வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
va
Image Source: pexels
அதேபோல பேரிக்காயையும் பாலுடன் சேர்த்துக்கொள்ளக்கூடாது. இது வயிற்று வலி மற்றும் கனத்தை ஏற்படுத்தலாம்.
Image Source: pexels
வாழைப்பழத்துடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்து ஷேக் செய்து குடிக்கக் கூடாது. இந்த சேர்க்கை செரிமானத்தை மெதுவாக்கும்.
Image Source: pexels
மேலும், பப்பாளியைப் பாலுடன் சேர்த்துக்கொள்வது சருமத்திற்கும், செரிமானத்திற்கும் உகந்ததல்ல என்று கருதப்படுகிறது.
Image Source: pexels
மாம்பழத்துடன் புளிப்பு சுவை கொண்ட பழங்களை சேர்த்துக்கொள்ளக்கூடாது. இந்த சேர்க்கை உடலில் சூடு மற்றும் வயிற்று பிரச்சனைகளை அதிகரிக்கும்.