அதிகமாக சிறுநீர் கழிக்கிறீர்களா? - எச்சரிக்கையா இருங்க

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது சாதாரணமானது. ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது யூடிஐக்கு ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

நீரிழிவு காரணமாக உடலில் சிறுநீர் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது

ஓவர் ஆக்டிவ் பிளாடர் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசர உணர்வு ஏற்படுகிறது

ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவதால் கூட இந்த பிரச்சனை ஏற்படுகிறது

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை நோக்டூரியா என்று அழைக்கப்படுகிறது

காஃபின், ஆல்கஹால் உட்கொள்ளல் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும்.

பிறப்புறுப்புக்கு அருகில் எரிச்சல் அல்லது அரிப்பு தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்

சிறுநீர் கழிக்கும் போது வலி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்

அறிகுறிகள் தோன்றினால் சிறுநீரக மருத்துவரை அணுகுவது அவசியம்