குளிர்காலத்தில் சாப்பிட உகந்த காரசாரமான குழம்புகளை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/my_foodstory

மீன் குழம்பு

தேங்காய், எலுமிச்சை, இஞ்சி - பூண்டு பேஸ்ட் கொண்டு சமைக்கப்படும் இந்த மீன்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். புரதச்சத்து நிறைந்தது.

Image Source: Pinterest/sinfullyspicy

உருளைக்கிழங்கு பட்டாணி கறி

உருளைக்கிழங்கு - பட்டாணி ஒரு சுவையான உணவு ஆகும். சாதத்திற்கு இந்த குழம்பு அருமையான சுவையாக இருக்கும். நல்ல சைவ விருந்தாகும்.

Image Source: Pinterest/cubesnjuliennes

பூசணி சூப்

பூசணி ஏராளமான நன்மைகளை கொண்டது. மசாலா பொருட்கள் கலந்து உருவாக்கப்படும் பூசணி சூப் குளிர்காலத்தில் உடலுக்கு நல்லது ஆகும்.

Image Source: Pinterest/thesimplerkitchen

கோழி கறி

கோழி கறி எப்போதும் அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். மசாலா பொருட்கள், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து இந்த கோழி கறி சமைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Image Source: Pinterest/spiceindia

ஆட்டுக்கறி

உடலுக்கு ஏராளமான சத்துக்களை ஆட்டுக்கறி வழங்குகிறது. மசாலா, மஞ்சள், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை கொண்டு இந்த ஆட்டுக்கறியை தங்களுக்கு ஏற்ற காரத்தில் சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Image Source: Pinterest/cubesnjuliennes

தேங்காய் இறால் கறி

தேங்காய் இறால் கறி குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற அசைவ குழம்பு ஆகும். தேங்காய் பாலை இறாலில் மசாலா பொருட்கள் சேர்த்து குழம்பாக இது சமைக்கப்படுகிறது.

Image Source: Pinterest/eatnsweets

லால் மாஸ்

ராஜஸ்தானி ரக கறி குழம்பு இந்த லால் மாஸ் ஆகும். இளம் ஆட்டுக்கறியை மிளகாய், மஞ்சள், மசாலா பொருட்கள் கொண்டு சமைப்பதே இந்த லால் மாஸ் ஆகும்.

Image Source: Pinterest/playfulcooking