வெந்நீர் குடிப்பதால் நல்லது நடக்குமா அல்லது குளிர்ந்த நீர் சிறந்ததா?

Published by: ராகேஷ் தாரா

வெந்நீர் வாய்க்கு ருசிக்காது. குளிர்ந்த நீர் தொண்டை வலியை அதிகரிக்கும்.

நாம் குடிக்கும் நீரின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்?

மனிதரைப் பொறுத்து இது மாறும்.

அநேகர் குளிர்ந்த நீரை அருந்த விரும்புவார்கள்.

வேறு சிலர் வெதுவெதுப்பான நீரை குடிக்க விரும்புகிறார்கள்.

சாதாரண சூழ்நிலைகளில் நீரின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும்?

குடிநீரின் வெப்பநிலை 10 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும்.

குடிநீர் எப்போதுமே அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

தொண்டை பிரச்சினைகள் மற்றும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.