குளிரில் தினமும் ஆரஞ்சு சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆரஞ்சு பழம் நாம் விரும்பி சாப்பிடுவதாகும். இதில் அதிகமாக வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வைட்டமின் A, B1, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகவும் உள்ளது.

தினமும் ஆரஞ்சு சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். அதனைப் பற்றிக் காணலாம்

ஆரஞ்சு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஆரஞ்சு தோல் சரும பராமரிப்பில் மிகப்பெரிய பலன்களை கொடுக்கிறது. இதனை தொண்டை வலி இருக்கும்போது சாப்பிட வேண்டாம்

ஆரஞ்சு இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இப்பழம் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களிடம் இருந்து பாதுகாக்கிறது.

இதனை சாப்பிடுவதால் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது

அதிக புளிப்புச்சுவை இல்லாமல் குளிர்காலத்தில் நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.