முன்னோக்கி நடப்பதைவிட, பின்னோக்கி நடப்பதன் மூலம் நம் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
நம் உடலில் அதிகம் செயல்படாத தசைகளான பின் தொடைப் பகுதிகள், தொடை எலும்பு, பின் இடுப்பு பகுதிகள் மற்றும் பின்பகுதி தசைகள், இதனால் வலிமையாகும்.
பின்னோக்கி நடப்பது இதயத் துடிப்பையும் ஆக்ஸிஜன் உட்கொள்ளும் விகிதத்தையும் ஊக்கப்படுத்துகிறது. இதனால் நம் இதயத்தின் செயல்பாடு அதிகமாகும்.
இது மூளை செயல்பாட்டையும் அபரிமிதமாக அதிகரிக்கும். ஒரு சில நிமிட பின்னோக்கிய நடை கூட, உங்களின் ஃபோகஸை அதிகரிக்கும். ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டுக்கும் உதவும்.
பின்னோக்கிய நடை நம் உடலின் வழக்கமான செயல்பாட்டுக்கு சவாலை உண்டாக்கும். இது நிச்சயம் சிறப்பான உடற்பயிற்சி என்று ஆய்வுகள் சொல்கின்றன.