வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மெட்ராஸ் ஐ என்பது ஒரு கண் தொற்று நோயாகும். அதிகப்படியான கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல், அரிப்பு, வீக்கம், உறுத்துதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்

கண் அழற்சி ஏற்பட்டால் கண்களைக் கசக்கவோ அல்லது தேய்க்கவோ கூடாது. இது பாதிப்பை அதிகமாக்கும்.

இந்த பிரச்னை சில நாட்கள் தொடங்கி ஓரிரு வாரங்கள் வரை நீடிக்கக்கூடியது. இது மற்றவர்களை தாக்கும் என்பதால் கவனம் தேவை

கண் கண்ணாடி பயன்படுத்துவதன் மூலம் இந்த தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்

மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள் ஏற்பட்டால் கண்களில் மெல்லிய துணியை குளிர்ந்த நீரில் நனைத்து ஒத்தடம் கொடுத்தால் பாதிப்பு குறையும்

கைகளை சுத்தம் செய்யாமல் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும். தங்களை தனிமைப்படுத்தி கொள்வது சிறந்தது.

கண்களில் எரிச்சல் அல்லது அரிப்பை தவிர்க்க மருத்துவர்கள் பயன்படுத்தும் சொட்டு மருந்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

கண் பார்வைக்கு லென்ஸ் வைத்திருப்பவர்கள் பாதிப்பு குணமாகும் வரை அதனை அணியக்கூடாது

கண்களில் இதுபோன்ற தொற்று ஏற்பட்டால் சுயமாக மருத்துவம் செய்யாமல் மருத்துவர்கள் ஆலோசனையைப் பெற வேண்டும்