உடல் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக தைராய்டு சுரப்பியைத் தாக்குவதால் தைராய்டு பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக ஹாஷிமோட்டோஸ் தைராய்டிடிஸ் கிரேவ்ஸ் நோய் போன்ற நோய்கள் இதற்கு காரணமாகின்றன
குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் இருந்தால் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அவசியம்.உணவில் அயோடின் குறைவாக இருந்தால் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல் போகலாம்.
அயோடின் குறைபாடு மட்டுமல்ல, தேவைக்கு அதிகமாக அயோடின் எடுத்துக்கொண்டாலும் கூட சிலருக்கு தைராய்டு செயல்பாடு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
பெண்களில் கர்ப்பம், பிரசவத்திற்குப் பிறகு, மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்
நீண்ட காலம் மன அழுத்தத்தில் இருப்பது காரணமாக உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு தைராய்டு பிரச்சனைகள் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.
சில இருதய சம்பந்தப்பட்ட மருந்துகள், மன ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் தைராய்டு செயல்பாட்டை பாதிக்கலாம்.
கழுத்து அல்லது மார்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
தைராய்டிடிஸ் போன்ற நிலைகளில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு ஹார்மோன் உற்பத்தி சமநிலையற்றதாக மாறலாம்.
வயது அதிகரிக்கும் போது தைராய்டு பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. குறிப்பாக ஆண்களை விட பெண்களில் இந்த பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றன