இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த 7 உணவுகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக இளைஞர்களும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர்

நல்ல உணவு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துதல், புகைபிடித்தல்-மது அருந்துதல் தவிர்ப்பதன் மூலம் ஆபத்தை தவிர்க்கலாம்.

சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் உணவுகள் இதய சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கின்றன.

உலர் பழங்களில் பாதாம், வால்நட், பிஸ்தா ஆகியவை கொழுப்பைக் கட்டுப்படுத்தி, தமனிகளின் அடைப்பை சரிசெய்கின்றன.

நீல நிற பழங்களான ஸ்ட்ராபெர்ரிகள் ராஸ்பெர்ரிகள் ஜாமுன் ஆகியவை மன அழுத்தத்தை குறைத்து தமனிகள் அடைபடுவதை தடுக்க உதவுகின்றன.

காய்கறிகளில், பிரோக்கோலி, பசலைக்கீரை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தினமும் முளைகட்டிய தானியங்களை உண்பதன் மூலமும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.

அவோகாடோ நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் கொண்டுள்ளதால் இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகிறது.

சால்மன், மேக்கரேல், டியூனா போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் இதய வீக்கத்தைக் குறைக்கின்றன.

சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.