உலர் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா? - இத படிங்க

உலர் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் இவை

Published by: ராஜேஷ். எஸ்

உலர் பழங்களில் கலோரிகள் அதிகம். அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

பேரீச்சம்பழம் உலர் திராட்சை போன்ற சில உலர் பழங்களில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. இது அதிகரித்தால் இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம்.

அதிகமாக சாப்பிட்டால் வாயு, வயிறு உப்பசம், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

வயிற்றுப்போக்கு வர வாய்ப்பு உள்ளது. நார்ச்சத்து அதிகமாக உட்கொள்வதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

சர்க்கரை அதிகம் உள்ள உலர் பழங்கள் பற்களில் ஒட்டிக்கொண்டு துவாரங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

சிலருக்கு பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்ற கொட்டைகள் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படலாம்.

சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் சிக்கல்கள் ஏற்படலாம்.

உலர் பழங்களை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு உடலில் சூடு அதிகரித்து முகப்பரு, வாய்ப் புண்கள் வரலாம்.

சில உலர் பழங்கள் மருந்துகளின் விளைவைக் குறைக்கலாம். எனவே, அளவைப் பொறுத்து கவனமாக இருங்கள்.

சில கொட்டைகளில் ஆக்ஸலேட்டுகள் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம்.