பலரும் படுத்தவுடன் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
போதுமான தூக்கம் இல்லாததும், சரியான நேரத்திற்கு உறங்காமல் இருப்பதையும் பலரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்று பலரும் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.
சில எளிய பழக்க வழக்கங்கள் மூலமாக நிம்மதியான தூக்கத்தை நாம் பெற முடியும்.
படுக்கைக்கு செல்போனை எடுத்துச் செல்வதை தவிர்த்தாலே நிம்மதியான தூக்கத்தைப் பெற இயலும்.
இரவு நேரத்தில் சரியான உணவைச் சாப்பிடுவதால் நாம் நிம்மதியான தூக்கத்தைப் பெற இயலும். இதனால், செரிமான சிரமமாகும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
படுக்கைக்குச் செல்லும் முன்பு பால் குடிப்பது நன்மை பயக்கும்.
இரவு நேரத்தில் மெல்லிய இசை கேட்பது, புத்தகம் படிப்பது நிம்மதியான தூக்கத்தை தூண்டும்.
நீங்கள் தூங்கும் அறையில் விளக்கு முழுவதும் அணைத்திருந்து, தூங்குவதற்கு ஏற்ற அமைதியான சூழல் இருப்பதை உறுதி செய்யவும்.