ஒரு சாதாரண ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் மொத்த கலோரிகளில் சர்க்கரையின் அளவு 5% முதல் 10% வரை மிகாமல் இருக்க வேண்டும்.
Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels
ஆண்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 தேக்கரண்டி (சுமார் 36 கிராம்) சர்க்கரைக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.
Image Source: pexels
பெண்கள் ஒரு நாளைக்கு 6 தேக்கரண்டி அதாவது (சுமார் 25 கிராம்) சர்க்கரைக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
Image Source: pexels
வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
Image Source: pexels
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
Image Source: pexels
சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால் உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து, அது கொழுப்பாக மாறும்.
Image Source: pexels
நாம் காபி, டீக்களில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையுடன் பிஸ்கட், குளிர்பானங்கள், சாக்லேட்டுகளில் இருக்கும் 'கூடுதல் சர்க்கரை' பற்றி கண்டிப்பாக கணக்கு வைத்திருக்க வேண்டும்.
Image Source: pexels
சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரித்து இதய நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
Image Source: pexels
சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது கணையத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, டைப்-2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் உள்ளது.
Image Source: pexels
சர்க்கரைக்குப் பதிலாக தேன் அல்லது பேரீச்சம்பழம் போன்ற இயற்கை இனிப்புகளை மிதமாகப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.