ஆண்கள் தினமும் சியா விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சியா விதைகளில் உள்ள புரதம், நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து சோர்வைக் குறைக்க உதவுகின்றன.

ஆண்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது சியா விதைகள் ஒரு சிறந்த உணவு. இதில் உள்ள புரதம் தசைகளின் வளர்ச்சி மற்றும் மீட்சிக்கு உதவுகிறது.

இவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய சம்பந்தமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.

சியா விதைகள் தண்ணீரில் ஊறவைக்கும்போது உப்பிவிடும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காது. உடல் எடை குறையும்.

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் குறைந்து குடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமான அமைப்பு மேம்படும்.

இவை உடல் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகின்றன.

சியா விதைகள் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

சியா விதைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை ஒரேயடியாக அதிகரிக்க விடாது. நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

தோல் ஆரோக்கியமாகவும், முடி வலுவாகவும் இருக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.