கோடையில் முகப்பருவை குறைப்பது எப்படி? ஈஸி டிப்ஸ்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கோடையில் வியர்வை மற்றும் தூசி அதிகமாக சேர்ந்து, துளைகளை அடைப்பதால் முகப்பரு வரலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை லேசான ஃபேஸ்வாஷ் கொண்டு முகத்தை கழுவுவது நல்லது.

உடல் நீரேற்றத்துடன் இருந்தால் நச்சுகள் வெளியேற உதவும். இதனால் முகப்பருக்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.

கோடை காலத்தில் எண்ணெயில் பொரித்த மற்றும் அதிக எண்ணெய் கொண்ட உணவுகள் உண்ணுவது, சருமத்தை மேலும் எண்ணெய் பசையாக மாற்றும். இதன் காரணமாக முகப்பருக்கள் அதிகரிக்கும்.

வியர்வை நீண்ட நேரம் முகத்தில் இருந்தால் பாக்டீரியா பெருகி முகப்பரு வரலாம். இதற்கு சுத்தமான துண்டு அல்லது டிஷ்யூவால் மெதுவாக துடைக்க வேண்டும்.

கோடையில் வெயிலின் காரணமாக சரும எரிச்சல் அதிகரித்து முகப்பரு வரலாம். எண்ணெய் இல்லாத, காமெடோஜெனிக் அல்லாத சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

கைகளில் உள்ள தூசு மற்றும் பாக்டீரியா முகத்தில் சேர்ந்து முகப்பருக்களை அதிகரிக்கலாம். ஆகையால் அடிக்கடி முகத்தைத் தொடாமல் இருப்பது நல்லது.

பயன்படுத்திய துண்டுகள் மற்றும் தலையணை உறைகளில் பாக்டீரியாக்கள் சேரக்கூடும். இவற்றை அடிக்கடி துவைத்து மாற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

அலோவேரா ஜெல் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கோடையில் சரும வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவும்.

சரியான தூக்கம் இல்லையென்றால் ஹார்மோன் சமநிலையில்லாமல், முகப்பருக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.