BP மாத்திரை சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மருத்துவர் சொன்னபடி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். நேரத்தை தவறவிடாதீர்கள்.

பிபி நார்மலாக இருந்தாலும் நீங்களாகவே மாத்திரைகளை நிறுத்தக்கூடாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள். உடற்பயிற்சி செய்து நல்ல உணவை உண்ண வேண்டும்.

மருந்துகளை உட்கொள்ளும் போது தலைச்சுற்றல், இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் சொல்லுங்கள்.

இரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்கவும். வீட்டிலும் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உணவில் உப்பு குறைப்பு, துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்த மாத்திரைகளை ஒரேயடியாக நிறுத்தாதீர்கள். ஏனெனில் இரத்த அழுத்தம் திடீரென அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நீர் அதிகமாக குடியுங்கள். மது அருந்துவதை குறையுங்கள். நீர் வறட்சி மற்றும் பக்க விளைவுகள் குறையும்.