இது, உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, எடையை சீராக குறைக்க உதவும்.
நீரில் ஊறிய சியா விதைகள் ஜெல்லி போல மாறுவதால், இது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்துகிறது.
இந்தப் பானத்தில் குறைந்த கலோரிகளே உள்ளன. ஆனால், புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C செரிமான சக்தியை அதிகரிக்கிறது. சியாவில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
250 ml தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் சியா விதைகளைச் சேர்த்து, 15 முதல் 30 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
சியா விதைகள் நன்றாக ஊறி ஜெல்லி போல மாறியதும், அதில் அரை எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
சிறந்த பலன்களைப் பெற, இந்தப் பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது.
சியா விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளதால், செரிமானச் சிக்கல் வராமல் இருக்க, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது கட்டாயம்.
உடலிலுள்ள நச்சுக்களை விரைவாக வெளியேற்ற விரும்பினால், சாதாரண தண்ணீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம்.