உருளைக்கிழங்கால் ஆபத்து.. இவங்கெல்லாம் கண்டிப்பா எடுக்காதீங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உருளைக்கிழங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இது சர்க்கரை அளவுகளை வேகமாக அதிகரிக்கலாம்.

பிரெஞ்சு ஃப்ரைஸ், சிப்ஸ் போன்ற வடிவங்களில் உருளைக்கிழங்குகளை அடிக்கடி சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது

சிலருக்கு உருளைக்கிழங்கு வயிறு வீக்கம் வாயு அல்லது அஜீரணத்திற்கு காரணமாக இருக்கலாம்

நீரிழிவு நோய் அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உருளைக்கிழங்குகளை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது

உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு எதிராக அமையும்

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளைப் பின்பற்றுபவர்கள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது

பச்சையாக மாறிய அல்லது முளைத்த உருளைக்கிழங்குகளில் சோலனைன் என்ற நச்சுப்பொருள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

IBS அல்லது பிற செரிமான பிரச்சனைகள் உள்ள சிலருக்கு உருளைக்கிழங்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்

உருளைக்கிழங்கை எப்படி சமைக்கிறோம் என்பதே முக்கியம். அதனை நன்கு வேகவைத்து சாப்பிடவும்.

உருளைக்கிழங்கு ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் அதனை எடுத்துக் கொள்வது நல்லது.