குப்பையில் வீசும் மாதுளை தோலில் இவ்வளவு விஷயமா? தினமும் ஒரு கப் டீ குடிங்க.. அப்புறம் பாருங்க!

Published by: ராஜேஷ். எஸ்

மாதுளை தோலை தூக்கி எறியாமல் தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மாதுளை தோலில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாயு, அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. எடை குறைகிறது.

இதிலுள்ள கிருமி எதிர்ப்பு பண்புகள் தொண்டை தொற்றுக்களை குறைக்க உதவும்.

தோலை சுத்தமாக வைத்து பருக்கள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவுகிறது.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

வயிற்றுப்போக்கை குறைக்கிறது. குடல் பிரச்சனைகளை குறைத்து செரிமான அமைப்பை சீராக வைக்கிறது.

பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பாக்டீரியாவை குறைத்து வாய துர்நாற்றத்தை நீக்கும்.