இதெல்லாம் இரைப்பை புற்றுநோய் அறிகுறியா? - நோட் பண்ணுங்க

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வாயு தொல்லை, அஜீரணம், வயிறு உப்பசம் அடிக்கடி ஏற்பட்டால் கவனமாக இருங்கள்

உணவில் ஆர்வம் குறைவதும் ஒரு முக்கிய அறிகுறியாகும்.

குறைவாக சாப்பிட்டவுடனே வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். பசி எடுக்காது

எந்த விதமான உணவுக்கட்டுப்பாடும் இல்லாமல் வேகமாக எடை குறைந்தால் கவனம் முக்கியம்

வயிற்றில் அடிக்கடி வலி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டால் கவனம் தேவை.

வாந்தி எடுக்கும்போது இரத்தம் வெளிப்பட்டால் உடனடி பரிசோதனை அவசியமாகும்

மலம் கருப்பாக அல்லது இரத்தத்துடன் இருந்தால் சிகிச்சை அவசியமாகும்

எந்த வேலையும் செய்யாவிட்டாலும் உடல் எப்போதும் சோர்வாக இருக்கும்.

சாப்பிடும்போது விழுங்குவதும் கடினமாக இருக்கிறது என்றாலும் அறிகுறியாக இருக்கலாம்