இவங்களாம் ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது? - மீறினால் அந்தப் பிரச்னைகள் அதிகரிக்குமாம்

Published by: ராஜேஷ். எஸ்

ஆரஞ்சில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது வாயு, வீக்கம் போன்ற பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும்.

வயிற்றில் புண்கள் மற்றும் அல்சர் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழங்கள் எரிச்சலை ஏற்படுத்தி சங்கடத்தை உண்டாக்கும்.

ஆரஞ்சு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டையில் எரிச்சல் அதிகமாகும்.

ஆரஞ்சில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆரஞ்சில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் இது ஆபத்தாக மாறலாம்.

சிட்ரஸ் பழங்கள் பற்களின் எனாமலை பாதித்து உணர்திறனை அதிகரிக்கும்.

சிலருக்கு ஆரஞ்சு பழத்தால் தோல் அரிப்பு எரிச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்படலாம்.

சில சமயங்களில் சிட்ரஸ் பழங்கள் ஒற்றைத் தலைவலியைத் தூண்டலாம்.

காலை வெறும் வயிற்றில் ஆரஞ்சு சாப்பிட்டால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.

இந்த பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் ஆரஞ்சுகளை தவிர்க்கவும்.