மலச்சிக்கல் இல்லாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் இவை

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பப்பாளியில் நார்ச்சத்து உள்ளது. இது மலம் சீராக வெளியேற உதவுகிறது.

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குடல் இயக்கங்களை ஊக்குவித்து மலச்சிக்கலை குறைப்பதில் உதவுகிறது

ஓட்ஸில் கரையக்கூடிய கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளன. இவை மலத்தை மென்மையாக்கி குடலின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன

கீரைகளில் நார்ச்சத்து மெக்னீசியம் நிறைந்துள்ளன. இவை மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கின்றன

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் மலம் எளிதாக வெளியேற உதவும்

சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போல மாறும். இதனால் மலம் கழிப்பது எளிதாகும் வாய்ப்பு உள்ளது.

ஆளி விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை குடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கிறது

தயிர் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகின்றன.

கிவி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது மலச்சிக்கலை குறைப்பதில் உதவலாம்.

காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் குடல் இயக்கங்கள் தூண்டப்பட்டு மலம் கழித்தல் எளிதாக நிகழும்