மண் பானை தண்ணீர் vs ஃப்ரிட்ஜ் தண்ணீர்.. எது சிறந்தது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

குளிர்சாதனப் பெட்டியின் குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலின் இயற்கையான செரிமான சக்தி குறைகிறது மற்றும் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

கோடையில் அதிக தாகத்தைத் தணிக்க குளிர்சாதனப் பெட்டியின் மிகக் குளிர்ந்த நீரைப் பருகும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்.

அதிக குளிர்ச்சியான நீரை அருந்துவதால் நீண்ட காலத்திற்கு அமிலத்தன்மை, வாயு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொண்டையில் வீக்கத்தையும் சுவாச மண்டலத்தில் தொற்றையும் ஏற்படுத்தலாம், இது சளி மற்றும் இருமலுக்கு முக்கிய காரணமாகும்.

உங்கள் உடலுக்குத் தேவையானதை விடக் குறைவாகவே தண்ணீர் குடிக்கிறீர்கள்.

மண் பானையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியடைகிறது. இது உடலின் உள் வெப்பநிலையுடன் சரியான முறையில் இணைக்கிறது.

மண்பானை தண்ணீரை குடிப்பதால் சருமம் நீரேற்றத்துடன் இருக்கும். முகப்பொலிவு உண்டாகும்

மண்பானை நீர் செரிமான அமைப்பை உள்ளிருந்து குளிர்விக்கும்.

இயற்கையான குளிர்ச்சி காரணமாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பீர்கள்

பிரிட்ஜ்ஜில் உள்ள தண்ணீரை அருந்த வேண்டும் என்றால் அதை மண்பானை அல்லது சாதாரண தண்ணீருடன் கலந்து குடிப்பது நல்லது.