உடலில் மெக்னீசியம் குறைபாடா? முகத்தில் தெரியும் அறிகுறிகள்
Published by: குலசேகரன் முனிரத்தினம்
சரியான தூக்கம் மற்றும் சத்தான உணவு இருந்தும் கண்களுக்குக் கீழே கருவளையம் தென்பட்டால், அது மெக்னீசியம் குறைபாடாக இருக்கலாம்.
கண்களின் இமைகள் அல்லது கண்களைச் சுற்றியுள்ள தசைகள் கட்டுப்பாடில்லாமல் துடிப்பது மெக்னீசியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
கன்னங்கள், உதடுகள் அல்லது தாடை பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்படுவதும் இதன் அறிகுறியாகும்.
மெக்னீசியம் குறைவாக இருந்தால் சருமம் வறண்டு, உயிரற்றதாகக் காணப்படும் வாய்ப்பு உள்ளது.
சோர்வு மற்றும் ஆற்றல் குறைபாடு காரணமாக முகம் பொலிவிழந்து சோர்வாகக் காணப்படலாம்.
உடலில் வீக்கம் அதிகரிப்பதால் சிலருக்கு முகப்பரு பிரச்சனை தீவிரமடையலாம்.
சாதாரணமாய் உதடுகள் வறண்டு போவதும், ஓரங்களில் வெடிப்புகள் ஏற்படுவதும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் மெக்னீசியம் குறைபாட்டினாலும் இருக்கலாம்.
சிலருக்கு திரவ சமநிலை பாதிக்கப்படுவதால் முகத்தில் லேசான வீக்கம் ஏற்படும்.
மெக்னீசியம் நரம்பு மண்டலத்திற்கு அவசியம். குறைபாடு இருந்தால் மன அழுத்தம், பதற்றம் அதிகரித்து முகபாவங்களிலும் தெரியலாம்.
மெக்னீசியம் குறைபாடு ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக முகம் சோர்வாகக் காணப்படும்.
மெக்னீசியம் சத்திற்காக பூசணி விதைகள், பாதாம், முந்திரி, பசலைக்கீரை போன்ற இலை காய்கறிகள், வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், டார்க் சாக்லேட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.