வெயில் காலத்தில் தினமும் 4 பாதாம் போதும்.. இதெல்லாம் சரியாகுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும்.

நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தை பாதுகாக்கும். கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வைட்டமின் ஈ சருமத்தை ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் மாற்றும்.

குறைவாக சாப்பிட்டாலும் திருப்தி கிடைக்கும். பசி கட்டுக்குள் இருக்கும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் நன்றாக நடக்கும்.

கால்சியம், மெக்னீசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

பாதாமில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை சீராக இருக்கும்.

வெயில் காலத்தில் தினமும் 4 பாதாம் சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

தோல் உரித்து காலையில் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

இரவில் பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம்.