ஆரோக்கியம் போல தெரியும் உணவுகள்… ஆனால் குடல் நலனை பாதிக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள்

பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக இருக்கும்; இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

செயற்கை இனிப்பூட்டிகள்

சர்க்கரைக்கு மாற்றாக சுகர் ஃப்ரீ மாத்திரைகளை நீண்ட காலம் உட்கொள்வது செரிமான பாதிப்பை ஏற்படுத்தும்.

சுவையூட்டப்பட்ட Yogurt

Flavored yogurt-களில் சர்க்கரை, செயற்கை நிறங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இது குடல் நுண்ணுயிர்களின் சமநிலையை பாதிக்கலாம்.

புரோட்டீன் ஷேக்

ஜிம்முக்கு செல்லும் பலர் புரோட்டீன் ஷேக் அதிகம் பயன்படுத்துகின்றனர்; இது fitness-க்கு உதவினாலும், அவற்றில் உள்ள செயற்கை பொருட்கள் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

என்ன சாப்பிடலாம்?

உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், பழச்சாறு, தயிர் போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.
பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், சுகர்-ஃப்ரீ மாத்திரைகள், சுவையூட்டப்பட்ட தயிர், புரோட்டீன் ஷேக் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.