மோர் யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் பால், மோர் போன்றவற்றை தவிர்க்கவும். இது உடல் உபாதைகளை ஏற்படுத்தும்

சளி மற்றும் இருமல் அதிகமாக இருப்பவர்கள் மோர் குடிக்காமல் இருப்பது நல்லது.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உட்கொள்ளக்கூடாது.

சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இதை குறைவாக எடுக்க வேண்டும்.

தோல் அரிப்பு மற்றும் சரும ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது

மது அருந்துபவர்கள் காலையில் மோர் குடிப்பார்கள். இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும்

மோரில் அதிக உப்பு சேர்த்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்

அதிக அளவில் உட்கொண்டால் அமிலத்தன்மை அதிகரித்து வயிற்று வலி ஏற்படலாம்.

மோர் கோடையில் ஒரு நல்ல குளிர் பானம் என்றாலும் அனைவருக்கும் பொருந்தாது. உங்கள் உடல்நிலையைப் பொறுத்து எடுத்துக்கொள்வது நல்லது.