உடல்நல பாதிப்பை முன்கூட்டியே உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஊட்டச்சத்துக்கள் தான் உடலின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக அமைகிறது.

அப்படியான நிலையில் என்ன சத்துக்கள் குறைந்தால் உடலில் என்ன மாதிரியான பிரச்னை உண்டாகும் என்பதைக் காணலாம்.

நகம் பலவீனமாக அடிக்கடி உடைந்தால் உடலில் பயோட்டின் குறைவாக இருப்பதாக அர்த்தமாகும்

அடிக்கடி சோர்வாக இருந்தால் வைட்டமின் டி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது

வாயில் அடிக்கடி புண் ஏற்பட்டால் ஃபோலேட் சத்து குறைவாக இருக்கலாம்

இரும்புச்சத்து குறைபாட்டால் வழக்கத்தைக் காட்டிலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும்

ஈறுகளில் இரத்தம் வழிந்தால் அது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாகும்

குரோமியம் சத்து குறைவாக இருந்தால் அதிகமாக இனிப்பு உணவுகள் மீது நாட்டம் இருக்கும்

கை, கால் அடிக்கடி மரத்து போதல், தசைகளில் பிடிப்பு ஏற்பட்டால் மக்னீசியம் குறைவு என்பது அர்த்தமாகும்

ஞாபக மறதி பிரச்னை ஏற்பட்டால் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கும்.