இது இருந்தால் பிரைன் டியூமர் அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்

Published by: ஜேம்ஸ்

சாதாரண தலைவலி போல் இல்லாமல் அடிக்கடி குறிப்பாக காலையில் அதிகமாக தலைவலி வரலாம்.

எந்த வயிற்று பிரச்சனையும் இல்லாவிட்டாலும் அடிக்கடி வாந்தி வருவது ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

இரட்டைப் பார்வை மங்கலான பார்வை அல்லது திடீரென பார்வை குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

சரியாக பேச முடியாமல் போவது அல்லது வார்த்தைகள் நினைவுக்கு வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் தோன்றலாம்.

உடலின் ஒரு பக்கத்தில் பலவீனம் அல்லது நடப்பதில் சிரமம் ஏற்படலாம்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் திடீரென சீசர்ஸ் அல்லது ஃபிட்ஸ் வருவது எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

சின்ன விஷயங்களை மறந்து போவது, கவனச்சிதறல் போன்ற மாற்றங்கள் தென்படலாம்.

செவியில் சப்தம் கேட்டாலோ அல்லது கேட்கும் திறன் குறைந்தாலோ சில சமயங்களில் ஏற்படலாம்.

சோர்வாக உணர்தல் மற்றும் அதிக தூக்கம் வருதல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.

தலைவலி வந்தால், ஒவ்வொரு முறையும் மூளைக் கட்டி என்று அர்த்தமல்ல. ஆனால், இந்த அறிகுறிகள் அடிக்கடி தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள்.