தண்ணீர் குடிக்கும்போது இதெல்லாம் மறக்காம பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நீரை வேகமாக குடித்தால் வயிறு உப்புசம் ஏற்படும் என்கிறார்கள். ஆகவே சிறிது சிறிதாக நீரை மெதுவாக குடிக்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சாப்பிட்ட உடனே நீரை ஒருபோதும் குடிக்கக்கூடாது. குறைந்தது அரை மணி நேரத்துக்குப் பிறகு குடிப்பது நல்லது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

குளிர்ந்த நீரை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. இது உணவை தாமதமாக ஜீரணிக்கச் செய்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஒரு நாளில் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் நீரை கட்டாயமாக குடிக்க வேண்டும். இதனால் தலைவலி, சோர்வு பிரச்சினைகள் வராது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நீர் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் குடித்தால் சிறுநீரகங்களில் அழுத்தம் ஏற்படும். ஆகவே குறைவாக, பலமுறை குடிக்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நீர் குடிக்கும்போது நின்றுகொண்டு குடிப்பதைவிட அமர்ந்து குடிப்பது நல்லது. இதனால் செரிமான பிரச்சினைகள் வராது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உங்களுக்கு தாகம் எடுக்கும் வரை நீர் குடிக்காமல் இருந்தால் நீங்கள் நீரிழப்புக்கு உள்ளாகியுள்ளீர்கள் என்பதுதான். ஆகவே அடிக்கடி நீர் குடித்துக்கொண்டே இருங்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உங்கள் நாளை 1 அல்லது 2 கிளாஸ் நீருடன் தொடங்கினால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். நச்சுகள் வெளியேறும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நிபுணர்களின் ஆலோசனையுடன் ஒரு நாளில் எவ்வளவு நீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.