இரவில் குறைவா தூங்கறீங்களா? இவ்ளோ தீமைகள் ஏற்படும்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தூக்கப் பற்றக்குறையால் மூளை மந்தமாகி, ஒருமுகப்படுத்துதல் குறையும். சில விஷயங்களை மறந்துவிடுவோம் என்பதால் முடிவெடுப்பது கடினமாக இருக்கும்.

இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கலாம். அதேபோல ரத்த அழுத்தம் அதிகரிப்பது, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

எடை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. பசி ஹார்மோன்கள் சமநிலை இல்லாமல் போய், துரித உணவின் மீதான ஆசை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையலாம். இதனால் சளி, வைரஸ் தொற்றுகள் எளிதில் வரும்.

மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். கவலை, எரிச்சல், மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் அபாயம் அதிகரிக்கிறது. இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

தோல் பளபளப்பு குறைகிறது. கண்களுக்கு கீழே கருவளையம், தோல் முதுமை வேகமாக வருகிறது.

களைப்பாகவும் நாள் முழுவதும் சோர்வாகவும் உணரலாம், வேலை செய்ய சக்தி இல்லாமல் போகலாம்.

ஆகவே ஒரு நாளைக்கு 7- 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கம் வராவிட்டால் மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியமே உங்கள் உண்மையான செல்வம். தூக்கத்தை அலட்சியம் செய்யாதீர்கள்.

இதனை உங்கள் தூங்காத நண்பர்களுக்கு பகிர்ந்து எச்சரிக்கை செய்யுங்கள்