கோடையில் மோர் அதிகமாக குடிக்கிறீங்களா? நல்லது இல்லையா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கோடையில் மோர் குடித்தால் உடல் வெப்பநிலை ஓரளவு கட்டுக்குள் இருக்கும். நீர்ச்சத்து குறைபாடு குறையும்.

அதனால்தான் இதை பலர் அதிகம் குடிக்கிறார்கள். ஆனால் இப்படி அதிகமாக குடித்தால் செரிமான பிரச்சனைகள் வரலாம்.

தேவைக்கு அதிகமாக மோர் குடித்தால் சிலருக்கு வயிறு உப்பசம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

இரவு நேரங்களில் மோர் அதிகமாக குடித்தால் சிலருக்கு சளி, தொண்டையில் கபம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

மோரில் அதிக உப்பு சேர்த்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது அல்ல.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கூட அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற அறிகுறிகளை அதிகரிக்கும்.

ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த மோரில் அதிக ஐஸ் சேர்த்து குடித்தால் தொண்டை வலி அல்லது ஜீரணக் கோளாறுகள் வரலாம்.

சாலை ஓரங்களில் அல்லது சுகாதாரமற்ற இடங்களில் கிடைக்கும் மோர் குடித்தால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சிறுநீரக பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் மோர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.

மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் ஜீரணத்திற்கு நல்லது. ஆனால் நாள் முழுவதும் லிட்டர்கள் கணக்கில் குடிக்கக் கூடாது.

மோர் உடன் சீரகப் பொடி, இஞ்சி, கறிவேப்பிலை போன்ற பொருட்களைச் சேர்த்தால் செரிமானத்திற்கு நல்லது.