ஆண்களுக்கு ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஏலக்காயில் உள்ள இயற்கையான குணங்கள் வாயு, அஜீரணம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன.

இயற்கையான வாய் புத்துணர்ச்சியாக செயல்படும். வாயில் பாக்டீரியா பெருகுவதை தடுத்து, துர்நாற்றத்தை குறைக்கும்.

ஏலக்காய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் சோர்வு குறையும்.

ஏலக்காயின் வாசனை மனதிற்கு ரிலாக்ஸ் உணர்வைத் தரும். மன அழுத்தம், பதட்டம் குறையும்.

ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நல்லது செய்கின்றன.

சில ஆய்வுகளின்படி, ஏலக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

கபம் குறைய உதவும். சளி, மூக்கு அடைப்பு போன்ற பிரச்சனைகளில் சிறிது நிவாரணம் அளிக்கலாம்.

ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தை ஓரளவு சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது எடை குறைவதற்கு உதவுகிறது.

ஏலக்காய்களை உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் மசாலாவாக பயன்படுத்துகிறார்கள். இது குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு 1–2 ஏலக்காய்கள் எடுத்துக் கொண்டால் போதும். அதிகமாக எடுத்துக் கொண்டால் சிலருக்கு அலர்ஜி, வயிற்று உபாதை போன்ற பிரச்சனைகள் வரலாம்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி இவற்றை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.