தேநீர் முதல் காய்கறிகள் வரை, இஞ்சி ஒவ்வொரு உணவிலும் முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. இது ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது
ஆயுர்வேதம் இஞ்சியை செரிமானம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நன்மை பயக்கும் பண்புகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த மூலிகையாக தெரிவிக்கிறது
ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், இஞ்சியை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் தேவையற்ற பக்க விளைவுகளைத் தூண்டலாம்
இஞ்சி அதிகமாக சாப்பிடுவது வயிற்றின் உட்புறத்தை எரிச்சலூட்டி அமிலத்தன்மையை அதிகரிக்கும், இது அசௌகரியம் அல்லது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்.
இஞ்சியை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தையும் இரத்த சர்க்கரையையும் குறைக்கலாம், இது ஆபத்தானது.
அதிக இஞ்சி சாப்பிட்டால் தோல் எரிச்சல், சிவத்தல் அல்லது அரிப்பு போன்றவை உண்டாகலாம்
கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சியை உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உட்கொள்ளல் கருவில் பிரச்னையை உண்டாக்கலாம்
அதிக இஞ்சி சாப்பிடுவது தொண்டை கரகரப்பு எரிச்சல் அல்லது எரியும் உணர்வை ஏற்படுத்தலாம்.
இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் என்றாலும், அதன் பக்க விளைவுகளைத் தவிர்க்க மிதமாகப் பயன்படுத்துவது அவசியமாகும்