தினமும் 5 நிமிடங்கள் முடிக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் பயன்கள் இவை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தலைக்கு இரத்த ஓட்டம்

தினமும் 5 நிமிடங்கள் தலைக்கு மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் முடி வேர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதாகச் சென்றடையும்.

முடி வளர்ச்சி

ஹேர் ஃபாலிக்கிள்ஸுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதால் முடி ஆரோக்கியமாக வளர வாய்ப்புள்ளது. தொடர்ந்து மசாஜ் செய்வது முடி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.

முடி உதிர்வதைக் குறைக்கலாம்

தலை மசாஜ் செய்வதால் முடி வேர்க்கால்கள் வலுப்பெறும். இதனால் முடி பலவீனமாவது, உடைவது, அதிகப்படியாக உதிர்வது போன்ற பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையலாம்.

மன அழுத்தத்துக்கு நோ!

உச்சந்தலை மசாஜ் உடலுக்கு தளர்வை அளிக்கிறது. நாள் முழுவதும் வேலை அழுத்தத்தால் சோர்வடைந்தவர்களுக்கு இது மன அமைதியை அளிப்பதில் உதவுகிறது.

தலைவலி நிவாரணம்

தலைக்கு மசாஜ் செய்வதன் மூலம் தசை இறுக்கம் குறைந்து சில வகையான தலைவலிகள் தலை கனமாக உணர்வது போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்

இயற்கை எண்ணெய்கள் பரவல்

எண்ணெய் முடி முழுவதும் சமமாக பரவ இந்த மசாஜ் உதவுகிறது, இதனால் முடி வறண்டு போகாது.

முடிக்கு இயற்கையான பளபளப்பு

இரத்த ஓட்டம் மேம்படுவதால், எண்ணெய்கள் சீராகப் பரவுவதால், முடி மேலும் மென்மையாகவும் பளபளப்பாகவும் தோன்றும்.

உச்சந்தலை ஆரோக்கியம்

மசாஜ் செய்வதால் உச்சந்தலையில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் நீங்க உதவுகிறது. இதனால் உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும்.

நல்ல உறக்கம்

இரவு தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் தலையை மசாஜ் செய்தால் உடல் தளர்வடையும், இதனால் தூக்கத்தின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது.

அடர்த்தியான முடி

வழக்கமாக உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் முடி வேர்க்கால்கள் ஆரோக்கியமாக மாறும். இதனால் முடி மேலும் அடர்த்தியாகவும் பருமன் உள்ளதாகவும் தோன்றலாம்.