மல்லி விதை என்பது இந்திய சமையலறையில் தவிர்க்க முடியாத உணவுப்பொருள் ஆகும்,
ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஆயுர்வேதத்தில் கொத்தமல்லி விதை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலை சமநிலைப்படுத்தவும், வெப்பத்தை குறைக்கவும் இது பங்களிக்கிறது.
மல்லி விதை அரைத்தோ அப்படியோ தண்ணீரில் சேர்த்து உட்கொண்டால் அது ஒரு வகை மருந்தாகவே செயல்படுகிறது. இது செரிமான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
கொத்தமல்லி விதைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இன்சுலின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மல்லி விதைகள் உடலில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்துகிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
மல்லி விதையை தண்ணீரில் சுடவைத்து தினமும் காலையில் குடித்து வந்தால் எடை குறையும்.
மல்லி விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் சரும பராமரிப்பில் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மல்லி விதைகள் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.