சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடுவது நல்லது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதில்லை.. ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

எனவே சிறிய அளவில் ½ கப் அல்லது சிறிய துண்டுகளை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு சற்று குறையும்.

மாம்பழத்தை ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுவது நல்லது.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை உறிஞ்சப்படுவது மெதுவாக நடக்கும்.

பழுத்த மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆனால் அதிக இனிப்பாக இருக்கும் பழங்களை, குறைவாக சாப்பிட வேண்டும்.

நாள்தோறும் சாப்பிடாமல் வாரத்தில் 2–3 முறை சாப்பிடுவது நல்லது.

மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற்று உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.