பலாப்பழ தினம்

பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

பலாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி, ஏ, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதில் உள்ளது.

Image Source: Canva

வலுவாகும் நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ள பலாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரிக்கிறது.

Image Source: Canva

செரிமானத்திற்கு பலம்

குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு பக்கபலமாக இருந்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதனால், செரிமானம் சீராகிறது.

Image Source: Canva

மேம்படும் பார்வை

வைட்டமின் ஏ, லுடீன், ஜியாக்சாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. இதனால், இதயம் ஆரோக்கியமாகிறது.

Image Source: Canva

எலும்பு ஆரோக்கியம்

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் கே எலும்பு பிரச்சினையை சரி செய்கிறது. எலும்பு வலிமையையும் அதிகரிக்கிறது.

Image Source: Canva

எடை கட்டுப்பாடு

குறைந்த கலோரிகளையும், அதிக நார்ச்சத்தையும் கொண்ட பலாப்பழம் நிறைவான உணர்வைத் தருவதுடன் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது.

Image Source: Canva

சரும ஆரோக்கியம்

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால், சருமம் பளபளப்பாக இருக்கிறது.

Image Source: Canva