கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் சாப்பிடும் உணவானது குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றும்.
ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டால் கர்ப்பிணிக்கும் உள்ளே இருக்கும் தாய்மார்களுக்கும் கடும் பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
இளநீரில் ஏராளமான நன்மைகள் உள்ளது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.
இளநீர் அடிக்கடி கர்ப்பிணிகள் குடிப்பதால் கர்ப்ப காலத்தில் குமட்டல் குறையும்.
இளநீர் குடிப்பதால் உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்கும். இதில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளது.
இளநீர் குடிப்பதால் கர்ப்பிணிகளின் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.
இளநீர் குடிப்பதால் செரிமானம் சீராகிறது. மலச்சிக்கலுக்கும் இளநீர் சிறந்த தீர்வாக உள்ளது.
கலோரி குறைந்த இந்த இளநீர் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இளநீர் பக்கபலமாக உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு வேறு ஏதேனும் சிக்கல் இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி இளநீர் எடுத்துக்கொள்வது நல்லது ஆகும்.