பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
நீர்ச்சத்தை அதிகரிப்பதால் சிறுநீரக கற்களைத் தடுக்கிறது. இயற்கையாகவே சிறுநீரக கற்களை உடைக்கும் ஆற்றல் கொண்டது.
இளநீர் ரத்த ஓட்டத்தை ஊக்கப்படுத்துகிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. கொழுப்பை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
செரிமானத்தை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் கொண்டது. இயற்கையாகவே நீரேற்றும் பண்பு கொண்டது. இதனால், செரிமானம் சீராகி மலச்சிக்கலைத் தடுக்கிறது.
உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது திசுக்களை குணப்படுத்துகிறது. நாள்பட்ட அழற்சியை சரி செய்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்சுலின் திறனை மேம்படுத்துகிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது இளநீர். இதில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது.
சரும பராமரிப்பில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. முகப்பருவை குறைக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின்கள் உள்ளது.