அதிகமாகக் குடிப்பது கல்லீரலை கடுமையாக பாதிக்கும். குடிப்பழக்கம் கல்லீரலை ஓவர்டைம் செய்ய வைத்து கொழுப்பு, வீக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை உருவாக்கும்.
இனிப்பு மிகுந்த குளிர்பானங்கள், இனிப்புகள், வெள்ளை பிரட்டுகளில் உள்ள ஃப்ரக்டோஸ், கொழுப்பாக மாறி, வீக்கத்தை ஏற்படுத்தும். இவை, ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய்க்கு வித்திடும் (non-alcoholic fatty liver disease)
தொடர்ச்சியாக வறுத்த, பதப்படுத்தப்பட்ட, கொழுப்புமிகுந்த, துரித உணவுகளை சாப்பிடுவது கல்லீரல் பிரச்சினையை உருவாக்கும். இந்த உணவுகளால் கல்லீரலில் அதிகப்படியாக கொழுப்பு சேரும்.
தொடர்ச்சியான மன அழுத்தமும் சரியாக உறங்காமல் இருப்பதும் நம் உடலின் இயற்கையான இயக்கத்தைக் கடினமாக்கி, கல்லீரலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தினந்தோறும் பல மணி நேரங்களுக்கு அமர்ந்தே இருப்பது உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கி, கல்லீரலில் கொழுப்பை சேர்க்கும்.
மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பாரசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணிகள், சப்ளிமெண்ட்டுகள் ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்வது கல்லீரலுக்கு ஆபத்தாக முடியலாம்.
கல்லீரல் பிரச்சினைகள் எந்த அறிகுறியும் இல்லாமல்தான் பெரிதாகும். இதனால், சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை செய்வது அவசியம்.