பற்கள், வாய் சுகாதாரத்திற்கு தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை இங்கே காணலாம். நீண்ட நாட்களாக ஒரே பிரேஷ்சை பயன்படுத்தக் கூடாது. மூன்று முதல் நான்கு மாதம் மட்டுமே ஒரு பிரேஷ்சை பயன்படுத்த வேண்டும் பல்வேறு வகையான பிரேஷ்கள் கிடைக்கின்றன. உங்கள் பற்களுக்கு ஏற்றவாறு பிரேஷ் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்துலக்கும்போது கடினமாக தேய்க்கக் கூடாது.பற்களின் எனாமல் தேய்ந்துவிடும். மிக சீக்கிரமே பல்தேய்த்தால் நல்லது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை, பல் தேய்க்கும் பேட்டனை மாற்றுங்கள் பல் தேய்த்தும் நீரில் வாய் கொப்பளிப்பது பெரிதும் நல்லதல்ல. பற்பசை அதிகமாக இருப்பதும் நல்லதல்ல.