நவீன மருத்துவம், மூலிகை வைத்தியம் இரண்டிலும் நித்திய கல்யாணி மலர் முக்கிய இடம்பிடித்துள்ளது நித்திய கல்யாணி இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்களை பறித்து தண்ணீரில் கொதிக்க விடவும். பின் வடிகட்டி குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும் நித்திய கல்யாணி பூக்கள் இருமல், தொண்டைப்புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது இதன் இலைகளின் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும் இதிலுள்ள நியூரோபிராக்டிவ் கூறுகள் நினைவாற்றல் இழப்பை தடுக்கிறது முகப்பரு மற்றும் தோல் பிரச்சனை இருப்பவர்கள் இது சிறந்த தீர்வாகும் நித்திய கல்யாணி இலை மற்றும் வேப்பிலையை மசித்து மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும் இதை முகத்தில் தடவி உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் சரும ஆரோக்கியம் மேம்படும் இதை சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது சிறந்தது