கரோட்டின் சத்து, பார்வைத்திறனை மேம்படுத்தும். கண் நோய்களில் இருந்து காக்கும்.



மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன.



இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



மாங்காயையும் தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும்.



95% மாம்பழங்கள் கல்வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன. கால்சியம் கார்பைடு (Calcium Carbide) கற்கள்!



இயற்கையாக மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை.



கறுப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். அவைதான் ஒரிஜினல்!



மாம்பழம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சேலம்தான்.



மாம்பழம் சாப்பிட்டு கோடையை கொண்டாடுங்கள்!