ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூமிகா. இவர் நடித்ததில் பத்ரி, சில்லுனு ஒரு காதல் திரைப்படங்கள் ரசிர்களின் ஃபேவரைட். 96’ ஜானுக்கு முன்பே 'பத்ரி' ஜானுதான் பலருக்கும் பிடிக்கும். 22வது வயதில் 'யுவக்குடு' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குஷி , ஒக்காடு , தேரே நாம் , மிஸ்ஸம்மா, சில்லுனு ஒரு காதல் , போன்ற படங்களில் இவரத்து நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மாற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் பூமிகா. திருமணத்திற்கு பிறகு பரத் தாகூர் மகன் யாஷ் உடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். பூமிகாவின் காலை உணவில் பழங்கள் நிச்சயம் இருக்கும். பூமிகாவை இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பூமிகா