இந்திய கிரிக்கெட் அணியில் இஷாந்த் சர்மா 2007ஆம் ஆண்டு முதல் முறையாக களமிறங்கினார்.



இவர் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் ரிக்கி பாண்டிங்கை திணறடித்தார்.



இந்திய அணிக்காக 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட் எடுத்துள்ளார்.



கடைசியாக 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து டெஸ்ட்டில் விளையாடினார்.



டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6 அணிகளுக்கு எதிரான ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்த இந்தியர் இவர் தான்.



2016ஆம் ஆண்டு இவருக்கு பிரத்திமா சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.



இஷாந்த் சர்மா 80 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 115 விக்கெட் எடுத்துள்ளார்.



2020ஆம் ஆண்டு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.



கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.



2022ஆம் ஆண்டில் இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை.